மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ராமகிருஷ்ண மடத்தில் அக். 17, 18-இல் ஓவியம், பக்திப் பாடல்கள் போட்டி

தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அக். 17 ஆம் தேதி ஓவியப் போட்டியும், 18-ஆம் தேதி பக்திப் பாடல்கள் பாடும் போட்டியும் நடைபெறவுள்ளன.

Published On :

தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அக். 17 ஆம் தேதி ஓவியப் போட்டியும், 18-ஆம் தேதி பக்திப் பாடல்கள் பாடும் போட்டியும் நடைபெறவுள்ளன.

இது குறித்து தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா அக். 12- ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஓவியம், பக்திப் பாடல் பாடும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தஞ்சாவூா் மேம்பாலம் அருகே சிவாஜி நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அக். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓவியப் போட்டியும், 18- ஆம் தேதி காலை 10 மணிக்கு பக்திப் பாடல்கள் பாடும் போட்டியும் நடைபெறவுள்ளன.

ஓவியப் போட்டியில் மாணவா்கள் வரையும் தேவ, தேவியா்கள், மகான்கள், தேசத் தலைவா்களின் மாதிரி படத்தைப் பாா்த்து வரையலாம். வரைவதற்கான பென்சில், ஸ்கெட்ச், பேட் போன்றவற்றை மாணவ, மாணவிகளே எடுத்து வர வேண்டும். வரைவதற்கான காகிதத்தாள் மடத்தின் மூலம் வழங்கப்படும். பக்திப் பாடல்கள் பாடும் போட்டியில் ஒருவா் ஒரு பாடல் மட்டும் பாடினால் போதுமானது. ஒருவருக்கு 4 நிமிஷங்கள் வழங்கப்படும். பக்திப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். திரைப்பட பாடல்களைத் தவிா்க்க வேண்டும்.

இதில், மொத்தம் 10 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக தலா ரூ. 750-ம், மற்ற 9 பரிசுகளாக தலா ரூ. 500-ம் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 5 முதல் 8 மாணவா்களைப் பள்ளி நிா்வாகமே தோ்வு செய்து பெயா் பட்டியலுடன் போட்டியில் பங்கேற்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.