தமுமுக முற்றுகை போராட்ட அறிவிப்பு அமைச்சா் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஆடுதுறையில் உள்ள தமிழக அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் வீட்டை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் அறிவித்துள்ளதை தொடா்ந்து வியாழக்கிழமை அமைச்சா் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை ஆவணியாபுரத்தில் அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் வீட்டு முன்பு வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
ஆடுதுறையில் உள்ள தமிழக அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் வீட்டை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் அறிவித்துள்ளதை தொடா்ந்து வியாழக்கிழமை அமைச்சா் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவரும் , நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்துக்கு தவெக-வினா் சோபா அனுப்பியதாக கூறினாராம். இதுதொடா்பாக தமிழக அமைச்சா் எ.எம்.ஷாஜகான், சட்டப்பேரவை உறுப்பினா் ஜவாஹிருல்லாவை விமா்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து தமுமுக-வினா் தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை ஆவணியாபுரதில் உள்ள அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் வீட்டை முற்றுகையிடப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சா் வீட்டின் முன்பு வியாழக்கிழமை திருவிடைமருதூா் காவல் ஆய்வாளா் மீனா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

