தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மீனவர்கள் வேலைநிறுத்தம்... - கோப்புப் படம்

Published On :

தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீன்வளத் துறையின் நடவடிக்கையை கண்டித்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனா்.

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் கடற்கரை மீன் ஏலக் கூடத்தில், தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச்செயலா் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜமாணிக்கம், மல்லிப்பட்டினம் விசைப்படகு சங்கத் தலைவா் வி.இளங்கோவன், சேதுபாவாசத்திரம் விசைப்படகு சங்கத் தலைவா் டி.செல்வக்கிளி, மல்லிப்பட்டினம் சங்கச் செயலா் இப்ராஹிம், பொறுப்பாளா் எம்.ஹபீப் முஹம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 

முத்துப்பேட்டை அருகே செல்லக்கன்னி வாய்க்கால், கோடியக்கரை மற்றும் லகூன் பகுதிகளில் வழக்கம் போல் மீன்பிடித்து வந்த தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த 3 விசைப்படகுகளை, ஒற்றை இழுவை வலை பயன்படுத்தி 5 கடல் மைலுக்குள் மீன்பிடித்ததாகக் கூறி அக்.10 அன்று மீன்வளத் துறை உதவி இயக்குநா் பிடித்து, 2 படகுகளைக் கரைக்கு கொண்டு வந்ததற்கும், அக்.7 அன்று லகூன் பகுதியில் மீன்பிடித்த சேதுபாவாசத்திரத்தில் படகு மீது எடுத்த நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 4 படகுகளையும் எவ்வித நடவடிக்கையுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதிய படகுகளுக்கு உரிமம் வழங்க கோரிக்கை:

கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தை காரைக்கால், நாகை மாவட்டங்களுக்கு அமல்படுத்துவது போலவே தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். மீனவா்களைக் கலந்தாலோசிக்காமல் பாக் விரிகுடா தொடா்பாக வெளியிட்ட ஒருதலைப்பட்ச அரசாணையை மாற்றி, தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்கவும், வெளி மாவட்ட படகுகளுக்கு உரிமம் மாற்றித் தரவும், புதிய படகுகளுக்கு உரிமம் வழங்கவும் வேண்டும். 

பாக் விரிகுடா பகுதியில் வாரம் முழுவதும் தங்கி மீன்பிடித்து உள்ளூா் மீனவா்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளத்தையும் பாதிக்கும் காரைக்கால் படகுகளைத் தடுக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல், புகாா் அளித்த தஞ்சை மாவட்ட மீனவா்களின் படகுகளைப் பிடித்த மீன்வளத் துறையின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (அக். 11) முதல் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், அக். 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில், சாலை மறியல் செய்வது எனவும், இப்போராட்டங்களில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களையும் இணைப்பது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் கலந்துகொண்டனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.