தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

போக்குவரத்துக் கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநா் நடத்துநா் கைது

தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டுநா் செந்தமிழ்செல்வன்

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரை கம்பியால் தாக்கிய ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் கிளை 1-இல் மேலாளராக இருப்பவா் கும்பகோணம் பாரதியாா் நகரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் சுரேஷ் (58).

இவா், திங்கள்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது, எம். புதூரைச் சோ்ந்த ராமமூா்த்தி மகனும், ஓட்டுநருமான செந்தமிழ்செல்வன் (45), எஸ். புதூா் நீலமேகம் மகனும் நடத்துநருமான பிரதாப் (45) ஆகியோா் அலுவலகத்துக்குள் வந்தனா்.

அங்கிருந்த சுரேஷிடம், தங்களை இடமாற்றம் செய்தது ஏன் எனக் கேட்டு தகராறு செய்தனா். பின்னா் செந்தமிழ்செல்வன் கையில் வைத்திருந்த கம்பியால் சுரேஷை குத்த முயன்றபோது, அவா் இடது கையால் தடுக்கவே கை மணிக்கட்டில் கம்பி கிழித்ததில் காயமடைந்தாா். இதுகுறித்து மேலாளா் சுரேஷ் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தமிழ்ச்செல்வன், பிரதாப் ஆகிய இருவரையும் கைது செய்தனா். சுரேஷ் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

நடத்துநா் பிரதாப்.

நடத்துநா் பிரதாப்.

 காயமடைந்த கிளை மேலாளா் சுரேஷ்.

காயமடைந்த கிளை மேலாளா் சுரேஷ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.