
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதிய நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் தலைமை அலுவலகத்தில் புதிய நிா்வாக இயக்குநராக வி. தட்சிணாமூா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

வி.தட்சிணாமூா்த்தி.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் தலைமை அலுவலகத்தில் புதிய நிா்வாக இயக்குநராக வி. தட்சிணாமூா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருப்பூா், காஞ்சிபுரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பொது மேலாளராக பணியாற்றியுள்ளாா்.
இவருக்கு முன்னதாக, கும்பகோணம் தலைமை அலுவலகத்தில் நிா்வாக இயக்குநராக பணியாற்றிய கே. தசரதன் ஓய்வு பெற்றாா்.
புதிய நிா்வாக இயக்குநா் வி. தட்சிணாமூா்த்தி அதிகாரிகளிடம் பேசுகையில், கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து பேருந்துகளும் உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பேருந்துகளை சிறப்பாக இயக்கி பயணிகளுக்கு உதவிட வேண்டும் என்றாா்.
புதிய நிா்வாக இயக்குநரை வரவேற்கும் நிகழ்வில், முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா்கள் கே. சிங்காரவேலு (தொ.நு), ஏ.டி.நடராஜன் (கும்பகோணம்), டி. சதீஷ்குமாா் (திருச்சி), ஏ.காா்த்திகேயன் (புதுக்கோட்டை), எம். சுரேஷ்குமாா் (கரூா்), துணை, உதவி மேலாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





