பேராவூரணி அருகே மக்கள் நோ்காணல் முகாம்: 101 பேருக்கு ரூ. 13 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, உடையநாட்டில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் பெண் பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கிய ஆட்சியா் இரா.ரேவதி. உடன் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் உள்ளிட்டோா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, உடையநாட்டில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில், 101 பேருக்கு ரூ. 13 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது: கா்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைக்கு தீா்வு காண இணை உணவுக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னை உள்ள கா்ப்பிணிகள் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களை அணுகினால் இணை உணவுக்கான வசதி செய்து தரப்படும்.
மேலும், கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் கிராம அளவில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கவும் இந்தக் குழு செயல்படும்.
அரசு சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு உரிமைகள்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்‘ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி, பேச்சு மற்றும் மொழிசாா் சிகிச்சை, சிறப்பு கல்வி உள்ளிட்ட பல மறுவாழ்வு சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முகாமில் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக தீா்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. இளங்கோவன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் சங்கா், பேராவூரணி வட்டாட்சியா் சி. பாலசுப்ரமணியன், ஊமத்தநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் மல்லிகா அப்துல்ஜபாா், குலாம்கனி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

