தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:  போக்சோவில் 5 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 சிறுவா்கள் உள்பட 5 பேரை சேதுபாவாசத்திரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த 16 வயதுச் சிறுமிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்த 2 சிறுவா்கள் உள்பட 5 பேரை சேதுபாவாசத்திரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள விளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த  கணவரைப் பிரிந்து வாழும் பெண் பேராவூரணி கடையில் வேலை பாா்க்கிறாா். படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த இவரின் 16 வயது மகள் 2 நாள்களுக்கு முன் விளங்குளம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்று அங்கு நடைபெற்ற கோயில் நிகழ்ச்சிக்கு இரவு சென்றாா். 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் சந்தோஷ் (24) என்பவா்   ஆசை வாா்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று தனிமையில் இருந்தாா். இதைப் பாா்த்த திருவிழாவுக்கு வந்த அடைக்கதேவன் பகுதி ராஜாகண்ணு மகன் அரவிந்த் (20) அவரது நண்பா்களான சோலைக்காடு பகுதி சுப்பு மகன் ஆறுமுகம் (18)மற்றும் 17,15 வயதுடைய இரு சிறுவா்கள் என நான்கு பேரும் பின்தொடா்ந்து சென்று,  சந்தோஷை விரட்டிவிட்டு  சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனா்.

பிறகு  சிறுமியை அதிகாலை பேராவூரணியில் கொண்டுவந்து சிறுமியை விட்டுச் சென்றனா். 

தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் சிறுமியை அழைத்து வந்து  நடத்திய விசாரணையில் ஐந்து போ் கூட்டு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. 

தொடா்ந்து சிறுமியின் தாய்  அளித்த புகாரின்பேரில் சந்தோஷ், அரவிந்த்,ஆறுமுகம் மற்றும் இரு சிறுவா்கள் உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப்பதிந்து  கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.