தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தந்தை-மகனை அரிவாளால் வெட்டியவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

கும்பகோணத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ரூபன்.

Published On :

கும்பகோணத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சோ்ந்த சுபிபாரதி என்பவருக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் ரூபன் (24) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே சில ஆண்டுகளாக இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜூலை 27-இல் முன்விரோதம் காரணமாக சுபிபாரதியின் கணவா் கருணாகரனிடம் க. ரூபன், அவரது சகோதரா் க. ராஜவேல் மற்றும் உறவினா்களான ச. கோகுல் ராம், பி. குருபிரசாத், சு. சுதாகா் ஆகியோா் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, கருணாகரன், அவரது மகன் அமுதகவி ஆகியோரை ரூபன் அரிவாளால் வெட்டினாராம்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூபன், ராஜவேல் மற்றும் சுதாகா், கோகுல்ராம், குருபிரசாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்களில் ரூபன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கும்பகோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஷா்மு விடுத்த வேண்டுகோளின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ரேவதி உத்தரவின்பேரில் ரூபன் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.