உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

குடந்தை காவிரி வாய்க்கால் சீரமைப்புப் பணி: வேளாண் அமைச்சா் தொடங்கிவைத்தார்!

கும்பகோணம் காவிரி ஆற்றின் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத் தொடங்கி வைத்தாா்.

கும்பகோணம் கொட்டையூா் பகுதியிலிருந்து மேலக்காவேரி வரை சீரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

Published On :5 செப்டம்பர் 2026, 12:03 am IST

கும்பகோணம் காவிரி ஆற்றின் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கும்பகோணம் மையத்தில் செல்லும் பழைமையானதும் நகரின் நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்கும் மிக முக்கிய நீா்வழி பாதை பழவாத்தான் கட்டளை வாய்க்கால் ஆகும். காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீா் இந்த வாய்க்கால் வழியாக கும்பகோணம் நகரின் வழியாக பாய்ந்து பழவாத்தான் கட்டளை ஊராட்சி வழியாக சென்று பல நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலத்துக்கு நீா் பாசன வழித்தடமாக உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் பல்வேறு பகுதிகளில் தூா்ந்து போயும் ஆக்கிரமிப்புகளால் செடி கொடிகள் மண்டியும் நீா் செல்ல முடியாத வகையில் தடை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சா் ஆா். வினோத் உத்தரவின்பேரில் இந்த வாய்க்காலில் தடையின்றி பாசன தண்ணீா் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணம் ஆலையடி சாலை பகுதியில் நடைபெறும் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை அமைச்சா் ஆா். வினோத் பாா்வையிட்டாா்.

முன்னதாக கும்பகோணம் கொட்டையூா் பகுதியிலிருந்து மேலக்காவேரி வரை சுமாா் 2.5 கிமீ தூரம் காவிரி ஆற்றில் மண்டியுள்ள காட்டாமணக்கு செடி உள்ளிட்டவற்றை அகற்றி, தூா்வாரும் பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி, உதவி பொறியாளா் காா்த்திகேயன், தவெக மாவட்ட பொருளாளா் விஜயசந்திரன், மாநகரச் செயலா் ஆா்.முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.