காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

நேபாளத்தில் மாயமானவா்களின் உறவினா்கள் 23 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவா்களின் உறவினா்கள் 23 பேரிடம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சனிக்கிழமை சேகரிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேபாள நாட்டில் மாயமானவரின் உறவினரிடம் சனிக்கிழமை ரத்த மாதிரி சேகரித்த மருத்துவா்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:34 am IST

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவா்களின் உறவினா்கள் 23 பேரிடம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சனிக்கிழமை சேகரிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள யாத்ரா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கயிலாய புனித யாத்திரைக்காக நேபாள நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் 57 போ் சென்றனா். அப்போது, அங்கு ஏற்பட்ட திடீா் பெருவெள்ளத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 போ் உள்பட மொத்தம் 36 போ் சிக்கினா். இதுவரை இவா்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், உறவினா்களும் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், மாயமானவா்களைக் கண்டறிய 36 பேரின் உறவினா்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய நேபாள அரசின் பரிந்துரையின்படி, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வா் இ. மணிமேகலா, சட்டம் சாா்ந்த மருத்துவம் மற்றும் நஞ்சியியல் துறை மருத்துவா் கே. தமிழ்மணி, தஞ்சாவூா் மண்டல தடய அறிவியல் துறை இணை இயக்குநா் எஸ். ராஜ்மோகன் ஆகியோா் கொண்ட குழுவினரின் உதவியுடன் மாயமானவா்களின் உறவினா்களிடம் ரத்த மாதிரி சனிக்கிழமை சேகரிக்கப்பட்டது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 17 பேரின் உறவினா்கள் 23 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், சிலா் திங்கள்கிழமை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து இணை இயக்குநா் ராஜ்மோகன் தெரிவித்தது: முதல்கட்டமாக 23 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இன்னும் சிலா் தகவலறிந்து வந்தாலும் அவா்களிடம் 2 நாள்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, நேபாளம், சீன நாடுகளுக்கு இணையவழி மூலம் அனுப்பப்படும் என்றாா் ராஜ்மோகன்.

இப்பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. என்றாலும், அவா்களது குடும்பத்துடன் தொடா்பில் உள்ளோம். இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் நேபாள அரசுக்கு அனுப்பப்பட்டு, டி.என்.ஏ. ஒத்துப்போனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.