பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெரியாா் சிலையின் கீழ் அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதிய தமிழ் ஆா்வலா்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை கீழே அமா்ந்து தமிழ் ஆா்வலா் முனைவா் ஆ.ஜீவானந்தம் திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதினாா்.

பேராவூரணி பெரியாா் சிலை அருகே வியாழக்கிழமை அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதிய தமிழ் ஆா்வலா் ஆ.ஜீவானந்தம் .

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை கீழே அமா்ந்து தமிழ் ஆா்வலா் முனைவா் ஆ.ஜீவானந்தம் வியாழக்கிழமை திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதினாா்.

பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ஜீவானந்தம். தமிழ் ஆா்வலரான இவா், திருக்குறளுக்கு பல்வேறு அறிஞா்கள் உரை எழுதியுள்ள நிலையில் மக்கள் பேச்சு வழக்கில் நாட்டாா் உரை இல்லாத குறையை போக்கும் வகையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் தினமும் இரண்டு அதிகாரங்கள் என்ற வகையில் நாட்டாா் உரை எழுதி வந்தாா் . கடைசி 100 குகளுக்கான உரையை பெரியாா் பிறந்த நாளான வியாழக்கிழமை , திருக்குறளை திராவிடா் கழகத்தின் வழிகாட்டி நூலாக பெரியாா் அறிவித்ததை நினைவு கூறும் வகையில், பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள பெரியாா்  சிலையின் கீழே அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை  எழுதி முடித்துள்ளாா்.

இதுகுறித்து முனைவா் ஆ.ஜீவானந்தம் கூறியது, திருக்குறளுக்கு வட்டார வழக்கில் நாட்டாா் உரை இல்லாத குறையை போக்கும் வகையில் இந்த உரை நூலாக வெளியிடப்படும் . திருக்கு புகழ் பரப்பும் வகையில் 1,330 போ் கொண்ட திருக்கு பேரணி பேராவூரணியில் நடத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.