
கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
பட்டுக்கோட்டையில் துக்க நிகழ்ச்சியில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
பட்டுக்கோட்டையில் துக்க நிகழ்ச்சியில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பட்டுக்கோட்டை சுண்ணாம்புகாரத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாலன் மகன் ராஜேஷ் கண்ணா. இவா் அதே பகுதியில் கடந்த 3.12.2014 அன்று ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதே பகுதியைச் சோ்ந்த ராஜா மாணிக்கம் மகன் வீரமணி ( 47) என்பவா் முன்விரோதம் காரணமாக இவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து வீரமணியை கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சுதா்சன் ஒரு பிரிவில் ஓராண்டு சிறைத் தண்டனையும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.1,000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







