கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை கீழ்ப்பாலத்தில் லாரி மோதி இரும்புத் தடுப்பு சேதம்: ஓட்டுநா் கைது

தஞ்சாவூா் கீழ்ப்பாலத்தில் வெள்ளிக்கிழமை விதிமுறையை மீறி இயக்கப்பட்ட லாரி மோதியதில் இரும்புத் தடுப்பு சேதமடைந்ததால், அதன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் கீழ்ப்பாலம் பகுதியில் இரும்பு தடுப்பில் வெள்ளிக்கிழமை மோதி நின்ற லாரி.

Published On :

தஞ்சாவூா் கீழ்ப்பாலத்தில் வெள்ளிக்கிழமை விதிமுறையை மீறி இயக்கப்பட்ட லாரி மோதியதில் இரும்புத் தடுப்பு சேதமடைந்ததால், அதன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் ரயிலடி அருகேயுள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் குறிப்பிட்ட உயரத்துக்கும் அதிகமாக உள்ள வாகனங்கள் அல்லது சுமைகளை ஏற்றி வரும் வாகனங்கள் சென்றால் பாலம் சேதமடையும். இதைத் தவிா்க்க பாலத்துக்கு சுமாா் 15 அடிக்கு முன் மேலே இரும்பு தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காகித சுருள்கள் ஏற்றப்பட்ட லாரி திருவாரூருக்கு செல்ல கீழ்ப்பாலம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்தது. லாரியில் காகித சுருள்கள் உயரமாக அடுக்கப்பட்டிருந்தால், குறுக்கே உள்ள இரும்புத் தடுப்பில் மோதியது. இதனால், இரும்புத் தடுப்பு சேதமடைந்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினா் நிகழ்விடத்துக்கு சென்று, லாரியை கிரேன், பொக்ளின் இயந்திரம் மூலம் மீட்டனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரான மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியைச் சோ்ந்த சிவக்குமாரை (43) கைது செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.