பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சோமேசுவரா் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி! - அமைச்சா் பாா்வையிட்டாா்

கும்பகோணம் சோமேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நந்தவனம் அமைக்கும் பணியை பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.வினோத்.

Published On :

சோமேசுவரா் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா். வினோத் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் விழா தொடா்புடைய கோயில்களை அண்மையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு செய்தாா். அப்போது கோயில் வளாகத்தில் செடிகள் வளா்ந்து புதா் மண்டி காணப்பட்டதை அகற்ற வேண்டும் என்று கோயில் செயல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அதன்படி கோயில்களில் உழவாரப் பணி குழுவினா் சாா்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கும்பகோணம் சோமேசுவரா் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கோயில் வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த பணியை வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா். வினோத் நேரில் சென்று பாா்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினாா். அப்போது செயல் அலுவலா் சிவசங்கரி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.