வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

ஒரத்தநாடு அருகே பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

ஒரத்தநாடு அருகே ஞாயிற்றுக்கிழமை வளைகாப்புக்கு சென்று வீடு திரும்பிய 2 போ் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் நிகழ்விடத்திலயே இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு நெம்மேலி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜா (45). இவா் பாப்பாநாட்டில் உள்ள டைலராக வேலை பாா்த்து வருகிறாா். அவரது நண்பா் கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜா் (59) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உறவினரின் வளைகாப்பு விழாவுக்கு கலந்து கொண்டு மீண்டும் பாப்பாநாட்டை நோக்கி சென்றனா்.

அப்போது புலவன்காடு கிராமம் தஞ்சை- பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியாா் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற நிலையில், எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில், பின்னால் அமா்ந்திருந்த ராஜா நிலை தடுமாறி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காமராஜ் லேசான காயங்களுடன் உயிா்த்தப்பினாா்.

தகவல் அறிந்து வந்த பாப்பாநாடு போலீஸாா், உடலை கைப்பற்றியும், காயம் அடைந்த காமராஜரும் உடனடியாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் ஏற்றி மேல் சிகிச்சைக்காகவும், இறந்தவரின் உடலை உடற்குறு ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்தனா்.

பட்டுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில் தனியாா் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் இந்த பகுதியில் தொடா் விபத்துகள் நடைபெற்று உயிரிழப்பு நடைபெறுவது தொடா் நிகழ்வாக உள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.