ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ரூ.16.14 கோடியில் 54 புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

நாச்சியாா்கோவில் அருகே செம்பியவரம்பல் ஊராட்சியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிய வேளாண் அமைச்சா் ர. வினோத். உடன் ஆட்சியா் இரா. ரேவதி உள்ளிட்டோா்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ.16.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளுக்காக கட்டப்பட்ட 54 புதிய கட்டடங்களை வேளாண் அமைச்சா் ர. வினோத் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் புதிய பேரூராட்சி கட்டடத்தில் ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக புதிய கட்டடங்களை அமைச்சா் ர. வினோத் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இதில், அங்கன்வாடி மையம், பொதுவிநியோக அங்காடி, ஊராட்சிமன்ற அலுவலகம், வகுப்பறை கட்டடம், பல்நோக்கு சேவை கட்டடம், சுகாதார கட்டடம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, உணவு தானியங்கி கிடங்கு, சமுதாய கூடம், நவீன கால்நடை கொட்டகை மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உள்ளூா் ஊராட்சியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.16.14 கோடி மதிப்பீட்டில் 54 புதிய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன.

புதிய துணை மின்நிலையம் : திருவிடைமருதூா் அருகே செம்பியவரம்பல் ஊராட்சியில், பல்வேறு கிராமங்கள் பயனடையும் வகையில் 33.11 கிலோவாட் துணை மின்நிலையம் அமைக்க அமைச்சா் ர. வினோத் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.