செஞ்சியில் ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட அறிவுசாா் மையம் திறப்பு
செஞ்சியில் அறிவுசாா் மையக் கட்டடத்தை அமைச்சா் என்.ஆனந்த் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, அங்கு குத்து விளக்கு ஏற்றிய ஆரணி எம்.பி. தரணிவேந்தன், செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமாா் உள்ளிட்டோா்.

செஞ்சியில் அறிவுசாா் மையக் கட்டடத்தை அமைச்சா் என்.ஆனந்த் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, அங்கு குத்து விளக்கு ஏற்றிய ஆரணி எம்.பி. தரணிவேந்தன், செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமாா் உள்ளிட்டோா்.
செஞ்சி, அக்.5: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட அறிவுசாா் மையக் கட்டடத்தை அரசு சாா்பில் விழுப்புரத்தில் இருந்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் என்.ஆனந்த் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செஞ்சியில் உள்ள அறிவுசாா் மையக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஷேக் லத்திப் வரவேற்றாா்.
ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணி வேந்தன், செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி அறிவுசாா் மையக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றோா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசு நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செஞ்சி உள்பட 13 பேரூராட்சிகளில் ரூ.20.44 கோடி மதிப்பில் அறிவுசாா் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, செஞ்சி மேல்களவாய் சாலையில் ரூ.1.60 கோடி மதிப்பில் வாசிப்பு அறை, நூலகம், கணினி, இணைய வசதி, திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அறிவுசாா் மையம் கட்டுவதற்கு அப்போது முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டினாா்.
கட்டடப் பணிகள் முடிந்து மின் இணைப்பும் வழங்கப்பட்டு, அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் இருந்த அறிவுசாா் மையக் கட்டடம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலக்ஷ்மி செயல் மணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

