எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சியில் தென்னிந்திய திருச்சபை பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு  நாளை தொடக்கம்: பேராயர் பால் வசந்தகுமார்

ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபை பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:08 am

DIN

ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபை பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு திருச்சியில் நவ.17 தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, திருச்சி, தஞ்சாவூர் திருமண்டலப் பேராயர் ஞா. பால் வசந்தகுமார் புதன்கிழமை கூறியது:
தென்னிந்திய திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கமானது 1947இல் தொடங்கப்பட்டது. 24 திருமண்டலங்களை உள்ளடக்கிய இச்சபையில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கிழக்கு யாழ்ப்பாணம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் அங்கமான பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பில்  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலத்திலும் மாநாடு நடத்தப்படுகிறது.
இதன்படி, தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இம் மாநாடு வரும் நவ.17 முதல் 19 ஆம் தேதிவரை திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் 70ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியது.
படைப்பின் முழுமைத்துவமும், சிக்கல்களும் என்னும் தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. திருச்சி, தஞ்சாவூர் மண்டல சங்கத் தலைவர் லில்லி வசந்தகுமார், சங்கப் பொறுப்பாளர்கள் மெர்சி சுரேஷ்குமார், பரிமளா கலாராணி, ரோசலின் ஜெயசிங் ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தவுள்ளனர்.
பெண்களின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் குறித்து விவாதிப்பதுடன், திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வு குறித்தும் விவாதிக்கப்படும்.
மாநாட்டை, தென்னிந்திய திருச்சபை பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவர் சூசன் தாமஸ் தொடக்கிவைக்கிறார். முதன்மைப் பேராயர் தாமஸ் கே. ஓமன், மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றுகிறார். துணை முதன்மைப் பேராயர் வி. பிரசாத் ராவ், திருச்சபை பேரவை மன்றப் பொருளாளர் ராபர்ட் புரூஸ், பொதுச்செயலர் டேனியல் ரெத்னகரா ஆகியோர் பேசுகின்றனர். சமூக செயற்பாட்டாளர்கள், சபை நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். திருச்சபையில் முதல் திருநங்கை போதகர் எஸ்தர்பாரதி, திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுக்கான வழிகள் குறித்துப் பேசுகிறார். மாநாட்டில், 24 திருமண்டலங்களைச் சேர்ந்த 350 பெண் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.