இன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முடியை சீராக்கும் கருவிக்குள் மறைத்து  மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டரூ. 7 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து பயணி ஒருவரால் முடியை சீராக்கும் கருவிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:07 am

DIN

மலேசியாவிலிருந்து பயணி ஒருவரால் முடியை சீராக்கும் கருவிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து  புதன்கிழமை காலை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  
இதையடுத்து அதிகாரிகள், விமானப் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பெண் பயணி மீரா என்பவர், தலைமுடியை சீராக்கும் (ஹேர் ஸ்ட்ரைக்ட்)கருவிகளுக்குள் 230 கிராம்  தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.