திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சுப்பிரமணியபுரம் பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (60). இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ரகுபதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மகளிா் இடஒதுக்கீடு மேலும் தாமதமானால் பெண்களுக்கு அநீதி - பிரதமா் மோடி

தொகுதி நிலவரம் - திருச்செங்கோடு: மும்முனைப் போட்டியில் தகிக்கும் திருச்செங்கோடு!

விளையாட்டுத் துளிகள்...
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

