பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

விளையாட்டு  பயிற்சியின்போது  மயங்கி விழுந்தவர் சாவு

திருச்சியில் புதன்கிழமை மேற்கொண்ட விளையாட்டுப் பயிற்சியின்போது, இளைஞர் ஒருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:39 am IST

திருச்சியில் புதன்கிழமை மேற்கொண்ட விளையாட்டுப் பயிற்சியின்போது, இளைஞர் ஒருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி, கே.கே. நகர் சாலை இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்தவர் ஆதிகிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் சபரிஹரிஷ் (20), பட்டயப்  படிப்பு முடித்து பணி தேடிக் கொண்டிருந்தார். காவல்துறை அல்லது, பாதுகாப்பு படை ஏதாவது ஒன்றில் சேர கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். 
அதன்படி புதன்கிழமை காலை, திருச்சி கல்லுக்குழியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப்படை மைதானத்தில் பயிற்சிகளை முடித்துவிட்டு, கூடைப்பந்தாடிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.   அதே மைதானத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த மருத்துவர்கள் சிலர் அவருக்கு முதலுதவி செய்து,  உடனே மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர். அதன்பேரில், ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.