பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆகஸ்ட் 15 - இல் திருவானைக்கா கோயிலில்  ஆடிப்பூரத் தெப்பத்திருவிழா

திருவானைக்கா சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடிப்பூரத் தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 15  ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 8:50 am IST

திருவானைக்கா சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடிப்பூரத் தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 15  ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்ற விழா 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். விழாவின் முக்கிய நாளான தெப்ப உற்ஸவம் ஆக. 15 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. 
    இதனையொட்டி ஆடிப்பூரத் தெப்பக் குளத்தில் இரவு பகலாக தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.