மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

மழைக்காலத்துக்கு முன்பே நீர்நிலைகளை  தூர்வார வலியுறுத்தல்

துறையூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை மழைக்காலம் தொடங்கும் முன்பு தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On :23 ஜூலை 2018, 8:50 am IST

துறையூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை மழைக்காலம் தொடங்கும் முன்பு தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கொல்லிமலையில் பெய்கிற மழைநீர் புளியஞ்சோலை ஆறு வழியாக இரண்டாகப் பிரிந்து நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி ஏரிகளையும் வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியையும் நிரப்பி இறுதியாக முசிறி காவிரியில் கலக்கும். இதேபோல்  பச்சமலையில் பெய்கிற மழை நீர் காணாப்பாடி ஆறு வழியாக நரசிங்கபுரம் ஏரி, செங்காட்டுப்பட்டி மாவடி ஆறு வழியாக கீரம்பூர், துறையூர் ஏரி உள்ளிட்ட அடுத்தடுத்த ஏரிகளை நிரப்பி இறுதியாக முசிறி காவிரியில் கலக்கும். ஆனால் பல ஏரிகள் மற்றும் கடைக்கால் வாய்க்கால்கள் முட்புதர்களும், செடிகளும் மண்டிக் கிடக்கின்றன. 
எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னர் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்று துறையூர் பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.