ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தண்ணீரைச் சேமிக்க அதிநவீன தொழில்நுட்பம் தேவை

தமிழகத்தில் தண்ணீரைச் சேமிக்க அதி நவீன தொழில்நுட்பத் திட்டம் தேவைப்படுகிறது என்றார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Updated On :23 ஜூலை 2018, 8:44 am IST

தமிழகத்தில் தண்ணீரைச் சேமிக்க அதி நவீன தொழில்நுட்பத் திட்டம் தேவைப்படுகிறது என்றார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ், பாரதப் பெருந்தலைவர் காமராஜர்பேரவை சார்பில் நடைபெற்ற 21 ஆம் ஆண்டு தொடக்க விழா, கல்வி நிதியுதவி வழங்குதல் மற்றும் காமராஜரின் 116 ஆம் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  15 லட்சம் முதல் 20 லட்சம் ஏக்கர் வரை  டெல்டா மாவட்டங்களில் சம்பாசாகுபடி பணிகள் நடைபெற உள்ள நிலையில், விவசாயத்துக்குத் தேவையான விதைநெல், உரங்கள், பூச்சிமருந்து போன்றவற்றை தட்டுப்பாடில்லாமல் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.  பாசனத்துக்காகத் திறக்கப்படும் தண்ணீரைச் சேமித்து வைக்கும்வகையில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தேவையான அளவுக்குத் தடுப்பணைகளை அரசு கட்ட வேண்டும். 
காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர், தமிழகத்தில் பாசன மேலாண்மைக்கான திட்டங்கள் எந்தவித ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குகொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீர்ப்பாசன மேலாண்மைத் திட்டங்கள் தேவைப்படுகின்றன என்றார் வாசன்.
தொடர்ந்து நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசிய ஜி.கே.வாசன், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.
விழாவுக்கு, பாரதப் பெருந்தலைவர் காமராஜர் பேரவை நிறுவனத் தலைவர் வே.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் திருச்சி மாநகர் நந்தா கே.செந்தில்வேல், தெற்கு டி.குணா, வடக்கு கே.வி.ஜி. ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், த.மா.கா. மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.தர்மராஜ், விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன்,   மாநில கொள்கைபரப்புச் செயலர் இண்டர்நெட் என்.ரவி,  மதிவாணன், மாவட்ட பொருளாளர் கே. டி. தனபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக, பேரவையின் செயலர் டி. நாகராஜன் வரவேற்றார்.  நிறைவில் வடிவேல் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.