ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :27 ஜூன் 2026, 9:33 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் சின்னெல்லே ஹென்றி அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹேலி மேத்யூஸ் 22 ரன்களும், டீண்ட்ரா டாட்டின் 21 ரன்களும் எடுத்தனர். ஸ்டஃபானி டெய்லர் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

அயர்லாந்து தரப்பில் அய்மி மகுரி மற்றும் காரா முர்ரே தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஓர்லா பிரண்டர்கேஸ்ட், அர்லின் கெல்லி மற்றும் ஜேன் மகுரி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the T20 World Cup match against Ireland, the West Indies scored 128 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.