/

மகளிர் உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | ஐசிசி

Updated On :13 ஜூன் 2026, 5:38 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் நேற்று (ஜூன் 12) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் இன்று (ஜூன் 13) நடைபெற்று வரும் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஸ்காட்லாந்து அணி முதலில் விளையாடியது.

கேத்ரின் பிரைஸ் அரைசதம்; அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேத்ரின் பிரைஸ் 39 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சாரா பிரைஸ் 49 ரன்களும், கேத்ரின் ஃபிரேசர் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் அதிக அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

அயர்லாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவா கேனிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அய்மி மஹூர் மற்றும் அர்லின் கெல்லி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the T20 World Cup match against Ireland, Scotland scored 161 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.