சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கட்டடத் தொழிலாளி வீட்டில் திருட  முயன்றவர் கைது 

திருச்சி கல்யாணசுந்தரம் நகரில் கட்டடத் தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :7 ஜூன் 2018, 9:26 am IST

திருச்சி கல்யாணசுந்தரம் நகரில் கட்டடத் தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி- மதுரை சாலையிலுள்ள கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கட்டடத் தொழிலாளியான இவர்,  செவ்வாய்க்கிழமை  வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில்,  மாலையில் அவரது வீட்டின் கதவை திறப்பதற்கு வெகுநேரமாக ஒருவர் முயற்சித்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விசாரித்த போது, கிருஷ்ணமூர்த்தியின் வீட்டின் பூட்டை உடைத்து, திருட முயற்சித்ததுதெரிய வந்தது. இதையடுத்து கோட்டை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீஸார், அந்த நபரைப் பிடித்து விசாரித்த போது, அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தைச் சேர்ந்த  சக்திவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.