பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

பயணியிடம் பர்ஸ் திருடியவர் கைது

பயணியிடம் பர்ஸ் திருடியதாக  மதுரையைச் சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

Updated On :26 ஜூன் 2018, 8:30 am IST

பயணியிடம் பர்ஸ் திருடியதாக  மதுரையைச் சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
திருச்சி தென்னூர் ரகுமானியாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(30), சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நகரப் பேருந்தில் சென்றார். பேருந்தை விட்டு கீழே இறங்கி பார்த்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்த  பர்ஸை காணவில்லை.  அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அவசரமாக கீழே இறங்கியதால் சந்தேமடைந்து  அவரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். 
பேருந்து நிலைய புறக்காவல் நிலைய போலீஸாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரை செல்லூர் அயின்ஷாபுரத்தைச் சேர்ந்த  மு.கிருஷ்ணன்(44) என்பதும், பர்ஸை எடுத்து அதிலிருந்த ரூ. 6,500 திருடியது தெரிய வந்தது. 
இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணனைக் கைது செய்து, பணத்தை மீட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.