கருகும் பயிர்களுக்கு தண்ணீர் கோரி  கருப்புக் கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் பயிர்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் திருச்சி அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் பயிர்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் திருச்சி அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூர் பாலத்தில், தமாகா மாநில விவசாய அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் வயலூர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் காய்ந்து கருகும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வாழை, கரும்பு, பயிர்களை காப்பாற்ற உய்யக்கொண்டான், கட்டளை, பெருவளை உள்ளிட்ட 19 கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும். மழை, வெள்ளக்காலங்களில் காவிரியில் வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை தேக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காவிரி-டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், வயலூர், சோமரசம்பேட்டை, அதவத்தூர் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கைகளில் கருப்புக் கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com