திருச்சியில் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தேவாங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து சத்திரம் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். கம்பரசம்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து திருச்சி போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (01.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (01.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (01.05.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (01.05.2026) - கும்பம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

