திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த நிசார்(34), நவாஸ்(44), சென்னையைச் சேர்ந்த பீர்முகமது(43), மைதீன்(38), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிராஜூதீன்(48) ஆகிய 5 வியாபாரிகள் சுமார் 1,000 பொட்டலம் (ஒரு பொட்டலத்தில் தலா 10 சிகரெட்டுகள் கொண்ட 10 டப்பாக்கள்) வெளிநாட்டு சிகரெட் வகைகளை உரிய வரி செலுத்தாமல், அனுமதியின்றி முறைகேடாக கொண்டு வந்திருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சமாகும். அதனைக் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரன்சிகள் பறிமுதல்: அதேபோல, சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசனிடம் அதிகளவில் சோப் பாக்கெட்டுகள் இருந்தது. அவற்றின் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் சோதனையிட்டதில், சோப்புகளுக்குப் பதில் ஏராளமான யூரோ கரன்சிகளை வைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3.50 லட்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









