தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நவலூர் குட்டப்பட்டில் 28.20 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டில் அதிகபட்சமாக 28.20 மி.மீட்டர் மழை பதிவானது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:55 am IST

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டில் அதிகபட்சமாக 28.20 மி.மீட்டர் மழை பதிவானது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அதே இடத்தில் நிலைக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை காலையிலிருந்து திருச்சி மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அவ்வப்போது லேசான மழைத் தூறல் இருந்தது. காலையிலிருந்து முற்பகல் 11 மணி வரை லேசான மழை காணப்பட்டது. தொடர்ந்து, மாலையில் மீண்டும் மேகங்கள் திரண்டு காணப்பட்டன. இரவு 7 மணிக்கு மேல் மாநகர் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் மழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் லேசான மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த நிலை காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என அறிவித்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட நிலையில், காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்) :  நவலூர் குட்டப்பட்டு 28.20, நந்தியாற்றுத்தலைப்பு 22.40, துவாக்குடி நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம் 17.80,  திருச்சி விமான நிலையம் 17.30, கோவில்பட்டி 15.40, பொன்னணியாறுஅணை 14.20, கல்லக்குடி 8.40, மருங்காபுரி 7.20, துறையூர் 6,  மணப்பாறை, புள்ளம்பாடி தலா 5.80, பொன்மலை 5.40, லால்குடி, திருச்சி ஜங்சன் தலா 2.20, திருச்சி டவுன், தென்பறநாடு தலா 2. மாவட்டத்தில் சராசரியாக 6.49 மி.மீ. மழையும், மொத்தமாக 162.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.