நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விசிக பிரமுகர் கடத்தல்: ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக புகார்

திருச்சியில் ரூ. 1 கோடி கேட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் மற்றும் தொழிலதிபரைக் கடத்திய மர்ம கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:34 am IST

திருச்சியில் ரூ. 1 கோடி கேட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் மற்றும் தொழிலதிபரைக் கடத்திய மர்ம கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
திருச்சி கே. கே. நகர்,  சிம்கோ தொழிற்சாலை அருகேயுள்ள  கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற அழகர்சாமி (45). இவர், தனது தம்பி ரமேஷ் குமாருடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், மன்னார்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.  அப்போது 2 கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், அழகர்சாமி சென்ற காரை மறித்து, அரிவாள் மற்றும் கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர்.
மேலும், அவரிடமிருந்த  ரொக்கம் ரூ. 4 லட்சம்,  அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட 18 பவுன்  நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர், விராலிமலை அருகே அவரை இறக்கிவிட்டு மேலும் ரூ.1 கோடி தர வேண்டும் என அந்த கும்பல் மிரட்டிச் சென்றுள்ளது.
கும்பலிடமிருந்து தப்பி வந்த அழகர்சாமி கே.கே. நகர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.