திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைபுதுப்பட்டி புனித சந்தியாகப்பர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 677 காளைகள் பங்கேற்றன. போட்டியின்போது, 13 வீரர்கள் காயமடைந்தனர்.
போட்டியை ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். வருவாய் வட்டாட்சியர் சித்ரா உடனிருந்தார்.
கோயில் காளைகள் முதலில் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 677 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளைத்
தழுவ 324 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
வாடிவாசல் வழியே திமிறி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். போட்டியில் 6 வீரர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 12 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒரு வீரர் மட்டும் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 4 காளைக்கு சிறு காயம் ஏற்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காளைகளைப் பிடித்த வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









