சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று திருச்சி வந்த 9 வீரர், வீராங்கனைகளுக்கு ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச சிலம்பப் போட்டி கோவாவில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா என 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில், திருச்சியில் காவலர் அரவிந்திடம் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கணைகள் 9 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
தனிப்பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மவுலின், காமேஸ்வரன், ஜீவா, ஹரிஸ்வரன் மற்றும் ஸ்ரீ பாலன் ஆகியோரும் பெண்கள் பிரிவில் ஷாலினி, சுகிதா, நவசக்தி மற்றும் ராகவி ஆகியோர் மூன்று சுற்றுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் பெற்றனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை காலை ரயில் மூலம் திருச்சி ரயில்நிலையம் வந்தடைந்தனர். வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









