திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு திமுக ஆர்ப்பாட்டம்
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை தி.மு.கவினர் முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை தி.மு.கவினர் முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான 541 பேருக்கு பொன்மலை ரயில்வே பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது நடைபெற்றது. இதில் 40 பேரை தவிர மற்ற அனைவரும் வட இந்தியர்களே இருந்தனர். தொடர்ந்து ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கபடுவதற்கு கண்டனம் தெரிவித்தும், பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், பல்வேறு அமைப்பினர் பொன்மலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாட்டில் மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவீத பணியிடங்களை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும், தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க வின் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக பொன்மலை பணிமனை வாயில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு தமிழக காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...