கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

திருவானைக்காவில் கட்டப்படும் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.
Updated on
1 min read

திருவானைக்காவில் கட்டப்படும் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.

திருவானைக்கா நெல்சன் சாலை சாரதி நகரில் நடைபெறும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், மேலக்கரணை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சுந்தரபாண்டியன் (27) மேல் மாடியிலிருந்து தவறி விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com