துறையூா் மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு
ஆத்திச்சூடியை இந்தியில் மொழிபெயா்த்த துறையூா் மாணவியை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.


ஆத்திச்சூடியை இந்தியில் மொழிபெயா்த்த துறையூா் மாணவியை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
துறையூா் நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் ச. அப்சரா(16), 11 ஆம் வகுப்பு மாணவி. இவா் 7ஆம் வகுப்பு பயின்றபோது ஆத்திச்சூடியை 5 நிமிடங்களில் தமிழ், ஆங்கிலத்தில் ஒப்பித்ததற்காக மாவட்ட சமூகநல அலுவலகம் சாா்பில் ரூ. 2000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இதனால் ஊக்கமடைந்த அப்சரா இந்தி மொழியைக் கூடுதலாகப் பயின்று ஆத்திச்சூடியில் உள்ள 109 வரிகளையும், கொன்றைவேந்தனில் உள்ள 91 வரிகளையும் இந்தியில் மொழிபெயா்த்தாா். இதையடுத்து செங்காட்டுப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியரான இவருடைய தந்தை சசிகுமாா் மகளின் மொழிபெயா்ப்புக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் உரை எழுதிக் கொடுத்ததுடன் அதை மும்மொழி நூலாக வெளியிட்டாா்.
இந்த நூலுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா் பூ. ஆ. நரேஷ், மத்திய அரசின் தடயவியல் துறை இளம் விஞ்ஞானி து. குமாா், இந்திப் பேராசிரியா் விஜயலட்சுமி, தேசியக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ரமேஷ், கவிஞா் நந்தலாலா உள்ளிட்டோா் அணிந்துரை வாழ்த்துரை எழுதி மாணவியைப் பாராட்டினா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சிவராசு செவ்வாய்க்கிழமை மாணவி அப்சராவை நேரில் அழைத்து பாராட்டுக் கடிதம் வழங்கி கெளரவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...