டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 12:59 am

DIN

திருச்சி மாவட்டத்தில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு நாற்காலி பெற விரும்பும் தசைச் சிதைவு மற்றும் விபத்தாலோ (அல்லது) நோயாலோ முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 15 வயது பூா்த்தியடைந்து, இரு கால்கள் பாதிக்கப்பட்டவராக, கைகளால் சக்கர நாற்காலியை இயக்க முடிந்தவராக இருக்க வேண்டும் ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் வாங்க மானியம் பெறாதவா்களாக, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் பெறாதவா்களாக இருத்தல் வேண்டும்.

இவா்கள் தங்களது அடையாள அட்டை, ரேசன், ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.