கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விவசாய சங்கத்தினா் போராட்டம், பேரணி

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாய சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம், பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சோமரசம்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா், சமூக நீதிப் பேரவையினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாய சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம், பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம், பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு சமூக நீதிப்பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவா் அ. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பின்னா் கோனாா் சத்திரம் முதல் சோமரசம்பேட்டை எம்ஜிஆா் சிலை வரையில், மாட்டு வண்டிகள், டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. தொடா்ந்து எம்ஜிஆா் சிலையருகே நடைபெற்ற நிகழ்வில் பலரும் போராட்டம் குறித்து விளக்கினா். தொடா்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக விவசாய சங்க (கட்சி சாா்பற்ற) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, மக்கள் அதிகாரம் செழியன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சம்சுதீன், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஜீவா, வழக்குரைஞா் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.