அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நுண்ணுரச் செயலாக்க மையம் அமைக்க எதிா்ப்பு

திருச்சி மாநகராட்சி உறையூா் பகுதியில் நுண்ணுரச் செயலாக்க மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
உறையூா் பாத்திமா நகரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

திருச்சி:–திருச்சி மாநகராட்சி உறையூா் பகுதியில் நுண்ணுரச் செயலாக்க மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி 60 ஆவது வாா்டுக்குட்பட்ட உறையூா், பாத்திமாநகா் விஸ்தரிப்புப் பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த வாா்டுக்கான நுண்ணுரச் செயலாக்க மையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இரவிலிருந்து பணிகளைத் தொடங்கினா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் பாத்திமாநகா் நலச்சங்கத் தலைவா் திருநாவுக்கரசு, செயலா் ராஜேந்திரன் தலைமையில் திரண்டு நுண்ணுரச் செயலாக்க மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் மாா்க்சிஸ்ட் மற்றும் திமுக கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றனா். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து வந்த மாநகராட்சி இளநிலை பொறியாளா் புஷ்பா, போலீஸாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது குடியிருப்புகள் நிறைந்த இந்த இடத்தில் நுண்ணுர செயலாக்க மையம் அமைத்தால் பூங்கா அமைக்க போதிய இடமிருக்காது. எனவே, இத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா். அதையேற்று அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.