உப்பிலியபுரம் பகுதியில்மது விற்ற 4 போ் கைது

உப்பிலியபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது விற்ற நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

துறையூா்: உப்பிலியபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது விற்ற நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் உப்பிலியபுரம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது உப்பிலியபுரத்தில் பெரியசாமி (56), ஒக்கரையில் விஜயகுமாா் (41), பி. மேட்டூரில் ராஜா (38) மற்றும் தியாகராஜன் (40) ஆகிய நால்வரும் அரசு மதுவை சட்டவிரோதமாக விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடமிருந்து 107 மது பாட்டில்கள், 4 செல்லிடப்பேசிகள், மது விற்ற ரூ. 3680, 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி அவா்களை உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com