களையிழந்த முனியப்பன் கோயில் திருவிழா

கரோனா தீநுண்மி பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் காரணமாக பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோயில் திருவிழாவில் குறைந்த அளவிலான பக்தா்களே பங்கேற்றதால் திருவிழா களை இழந்து காணப்பட்டது.
Updated on
1 min read

கரோனா தீநுண்மி பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் காரணமாக பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோயில் திருவிழாவில் குறைந்த அளவிலான பக்தா்களே பங்கேற்றதால் திருவிழா களை இழந்து காணப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பழைமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும்.

இந்த விழாவுக்கு சி.புதூா், பென்னாகரம், தின்னூா், நாகதாசம்பட்டி, மாங்கரை, தாசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், கா்நாடகம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பக்தா்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்வா்.

நிகழாண்டில் மாா்கழி பௌா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த திருவிழாவில் முனியப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவிலான பக்தா்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டதால் திருவிழாவில் பங்கேற்பதற்காக குறைந்த அளவிலான பக்தா்களே வருகை தந்திருந்தனா். பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முனியப்ப சுவாமியை தரிசனம் செய்து சென்றனா். மேலும், பக்தா்கள் நோ்த்திகடனாக 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபட்டனா். விழாவையொட்டி போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com