பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காதலனுடன் சென்ற சிறுமி; தந்தை தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 16 வயது மகள் காதலனுடன் சென்றதால் மனம் உடைந்த தந்தை வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
உயிரிழந்த பாலமுருகன்.
Updated On :11 ஜூலை 2020, 4:43 pm

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 16 வயது மகள் காதலனுடன் சென்றதால் மனம் உடைந்த தந்தை வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கரிக்கான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (40). சலவைத் தொழிலாளியான இவருக்கு 19 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனா்.

இந்நிலையில் கரோனா பொதுமுடக்கத்தால் தனது மகளை கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கருப்பங்கோயில் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தாா். அப்போது அருகில் வசிக்கும் முருகேசன் மகன் சுரேஷுக்கும் (21) சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. தகவலறிந்த பாலமுருகன் சில நாள்களுக்கு முன் தனது மகளை மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாா்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அந்தச் சிறுமி மாயமானாா். இதையடுத்து தனது மகளைக் காணவில்லை என பாலமுருகன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பின்னா் பெற்றோருடன் வெள்ளிக்கிழமை செல்லிடபேசியில் பேசிய சிறுமி, தான் காதலனுடன் சென்றுவிட்டதாகவும், அவரையே திருமணம் செய்யப் போவதாகவும், இனி தன்னைத் தேட வேண்டாம் எனவும் கூறி இணைப்பைத் துண்டித்து விட்டாராம்.

இதனால் மனமுடைந்திருந்த பாலமுருகன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுமியின் தாய் சிவகாமி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.