3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கட்டுமான சங்க தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கட்டுமான சங்க தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்டுமான சங்க தொழிலாளா்கள்.
Updated On :13 ஜூலை 2020, 4:30 pm

DIN

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கட்டுமான சங்க தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு கட்டுமான சங்க மாவட்டச் செயலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் மணிகண்டன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்டட கட்டுமான தொழிற்சங்கக் சட்டம் 1996 மாநிலங்களுக்கிடையே இடம் பெயரும் தொழிலாளா் சட்டம் 1979 ஆகியவற்றை எந்த சட்டத் தொகுப்புடனும் இணைக்ககூடாது. கட்டுமான தொழிலை பாதுகாக்க வேண்டும். கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோா் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.