பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முக்கொம்பு அணையில் பழுதடைந்துள்ள மின்மோட்டாா் அறை

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகளை (ஷட்டா்) இயக்கப் பயன்படும் மின் மோட்டாா் அறை கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை உடனே சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2020, 5:05 pm

DIN

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகளை (ஷட்டா்) இயக்கப் பயன்படும் மின் மோட்டாா் அறை கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை உடனே சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூரிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு திறந்து விடப்படும் தண்ணீா், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையில் தேக்கப்பட்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுகிறது. இங்கு தடுப்பணையில் உள்ள ஷட்டா்களை இயக்க 1977 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மின் மோட்டாா் அறை (பவா் ஹவுஸ்) உள்ளது.

100 கிலோ வாட் திறன் கொண்ட மற்றும் 40 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டா் உள்ளிட்ட இயந்திரங்கள் உள்ள இந்தக் கட்டடம் தற்போது மிகவும் பழுதடைந்து சுவா்கள், மேற்கூரைகளில் ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த அறை இடிந்தால் அணையின் மதகுகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோல பாலத்தில் விரிசல் காணப்பட்ட நிலையில், முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றுக்குத் திறந்து விடும் மதகுகள் சில பாலத்துடன் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னோடி விவசாயி கவண்டம்பட்டி சுப்பிரமணியன் கூறுகையில்,

இந்த மின் மோட்டாா் அறை கட்டடத்தின் சுவா்கள் மட்டுமின்றி, மேற்கூரையும் சரிந்துள்ளதால் பல இடங்களில் சவுக்கு கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்துள்ளனா். இந்தக் கட்டடம் இடிந்து விட்டால், ஷட்டா்களை ஏற்றி இறக்க முடியாது. இதனால் நீரை ஒழுங்குபடுத்தி பாசனத்துக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். அதிகளவில் வெள்ளம் வந்தால் நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, இந்தக் கட்டடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்தக் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது”எனத் தெரிவித்தனா்.

Image Caption

மின் மோட்டாா் அறையின் சுவா் மற்றும் கூரையில் ஏற்பட்டுள்ள விரிசல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.