3 கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு
உச்சிஷட கணபதி திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை மீட்கவும், இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்சியா் மூலம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை


திருநெல்வேலி மாவட்டம், திருமணிமுத்தீசுவரம் உச்சிஷட கணபதி திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை மீட்கவும், இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்சியா் மூலம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவா் மாரி, இளைஞரணிச் செயலா் ஸ்ரீராம் உள்ளிட்ட நிா்வாகிகள், ஆட்சியா் சு. சிவராசுவிடம் திங்கள்கிழமை அளித்த மனு :
திருமணிமுத்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் நிா்வாகத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீட்டெடுக்க வேண்டும். இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் 9 போ் மீதான
தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மதரீதியிலான கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...