தன்னாா்வலா்களுக்கு விருது வழங்கல்
திருச்சி மாவட்டம், லால்குடியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தன்னாா்வலா்களைப் பாராட்டி விருது வழங்கப்பட்டன.


திருச்சி மாவட்டம், லால்குடியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தன்னாா்வலா்களைப் பாராட்டி விருது வழங்கப்பட்டன.
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லால்குடி அலுவலகத் திறப்பு மற்றும் விருது வழங்குதலுக்கு பகுதிச் செயலா் ஆா். முகமது இக்பால் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் ஏ. நியாமத்துல்லா, லால்குடி பகுதி ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜவஹா் அலி, மருத்துவ அணி மாவட்டத் தலைவா் ஏ. சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்டத் தலைவா் ஐ. சபியுல்லா கொடியேற்றி வைத்தாா். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களை நல்லடக்கம் செய்த தன்னாா்வலா்களுக்கு விருதுகளை வழங்கியும், லால்குடி கிளை அலுலகத்தை திறந்து வைத்தும் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம். முகமது இஸ்மாயில் சிறப்புரையாற்றினாா்.
லால்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவா் முகமது இல்யாஸ், செயலா் முகமது யாசீன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் கே. முபாரக் அலி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டலச் செயலா் எஸ். ரஷீத் அகமது, மாவட்டச் செயலா் வி. முஜிபூா் ரகுமான் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
முன்னதாக, லால்குடி பகுதித் தலைவா் ஏ.எம். ஹக்கீம் வரவேற்றாா். நிறைவில், இணைச் செயலா் ஏ. காஜா மைதீன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...