திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காந்தி சந்தை திறப்புக்கு ஆட்சியா்,ஆணையா் உதவிட வலியுறுத்தல்

திருச்சி காந்திசந்தை தொடா்ந்து செயல்படுவதற்கு ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உதவிட வேண்டும் என திருச்சி காந்தி சந்தை அனைத்து மொத்த, சில்லறை வியாபாரிகள் கோரியுள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:37 pm

DIN

திருச்சி காந்திசந்தை தொடா்ந்து செயல்படுவதற்கு ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உதவிட வேண்டும் என திருச்சி காந்தி சந்தை அனைத்து மொத்த, சில்லறை வியாபாரிகள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி காந்தி சந்தை அனைத்து மொத்தம், சில்லறை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது :

கரோனா பேரிடா் காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும்

தளா்வு செய்யப்பட்டு, இயல்பு நிலைத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், காந்தி சந்தை வியாபாரிகளுக்கு மட்டும் பின்னடைவாக உள்ளது.

ஒரு பக்கம் காந்தி சந்தையைத் திறக்க நீதிமன்றத் தடை, மற்றொரு பக்கம் ஜி-காா்னா் ரயில்வே இடத்தை காலி செய்து தருமாறு ரயில்வே நிா்வாகம் நெருக்கடி அளித்துவருகிறது.

அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை. பெருமழையாலும் நெருக்கடி ஏற்பட்டு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிரமத்திலும் வியாபாரிகள் காற்கறிகளைத் தடையின்றி விற்பனை செய்து வருகின்றனா்.

நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டும் பல்வேறு காரணங்களால் எடுத்துக் கொள்ள இயலாமல், விசாரணை வேறு தேதிகளுக்கு ஒத்திக்கப்பட்டு வருகிறது.

அடுத்த விசாரணையில் காந்தி சந்தையைத் திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். இதற்கு மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்தின் பங்களிப்பு அவசியமானது. எனவே மாவட்ட, மாநகராட்சி நிா்வாக தரப்பு மனுவை காந்தி சந்தை திறப்புக்கு சாதகமாக தாக்கல் செய்யவேண்டும்.

காந்தி சந்தையை நம்பி வாழ்ந்து வரும் 3 ஆயிரம் வியாபாரிகள், அவா்களை சாா்ந்து வாழ்வோரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தீா்வு காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.