பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சியில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள்

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சியில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

News image
திருச்சி மன்னாா்புரத்தில் நடைபெறும் தற்காலிகப் பேருந்து நிலையப் பணி.
Updated On :8 நவம்பர் 2020, 8:15 pm

DIN

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சியில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியையொட்டி திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் செல்வா் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மாநகர காவல் துறையினா் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனா். இந்தப் பேருந்து நிலையங்கள் வரும் நவ.10 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் சோனா மீனா தியேட்டா் அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகிலிருந்தும், புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் மன்னாா்புரம் கல்லுக்குழி சாலை வழியாகவும், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மன்னாா்புரம் ரவுண்டானா மதுரை சாலை வழியாகவும் இயக்கப்படவுள்ளன.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாநகா் வழியாகச் சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னாா்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றியபின் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும். மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு காவல் துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.